520 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் ரஷ்ய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மீது உக்ரைன் ஏவிய 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை சர்வதேச ஊடகங்களும் உறுதிபடுத்தியுள்ளன.
மேலும், "உக்ரேனிய ஏவுகணைகளை ரஷ்ய வான் பாதுகாப்பு கருவிகள் கொண்டு, வானில் இடைமறித்து தாக்கியது. இதில் கீழே விழுந்த உக்ரைன் நாட்டு முதல் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் டேகன்ராக் நகரத்தில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 2.5 லட்சம் மக்கள் வசிக்கும் டேகன்ராக் நகரின் குடியிருப்புகளை குறிவைத்து முதல் 200 ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும் இரண்டாவது S-200 ஏவுகணை அசோவ் நகருக்கு அருகே செலுத்தப்பட்டதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் எல்லை பகுதிகள், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து டிரோன் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை கண்டு வருகின்றன.
ஆனால், நேற்றைய சம்பவம் நடைபெறும் வரை ஏவுகணைகளால் குறிவைக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், "மத்திய டேகன்ராக் பகுதியில் உள்ள செகோவ் கார்டன் உணவகத்திற்கு அருகே இத்தாக்குதலால் 15 பேர் காயமடைந்த நிலையில் அப்பகுதி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலின் காரணமாக அருங்காட்சியகச் சுவர், அதன் கூரை மற்றும் வெளிப்புறக் கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதன் தாக்குதலால் அருகில் உள்ள 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்கள் என்பன சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.