day, 00 month 0000

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் சிக்கல்? - செலவு அதிகரிப்பதாக குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா - 2026ற்கான பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தாது என மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் அறிவித்துள்ளார்.

மேலும், போட்டிகளுக்கான செலவீன அதிகரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை இந்த திடீர் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டுப் போட்டியானது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்பதோடு, தற்போது போட்டிகளை இடைநிறுத்தியுள்ளமையானது பல விளையாட்டு நிகழ்வின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

போட்டிகளுக்கான ஆரம்ப மதிப்பீடுகள் 2.6 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக ($1.7 பில்லியன்) கணிக்கப்பட்டது.

ஆனால், புதிய மதிப்பீடுகளின்படி அது 7 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ($4.77 பில்லியன்) ஆக அது உயரலாம் என்று கூறியுள்ளார்.

பொதுநலவாய விளையாட்டு என்பது 72 பொதுநலவாய நாடுகள் மற்றும் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய பல விளையாட்டு நிகழ்வு ஆகும்.

இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

இறுதியாக நிகழ்வு 2022 இல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்றமையும் குறிப்பிடத்கத்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்