தன்னை பெடரல் விசாரணை குழு கைது செய்ய வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதளத்தில் குறிப்பொன்றை பதிவிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அன்று கெபிடல் கட்டிடத்தில் நடந்த குழப்பம் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் தம் மீது குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.