அமெரிக்கா வழங்கியுள்ள கொத்துக்குண்டுகளை பெற்றுக்கொண்டுள்ள உக்ரைன் அவற்றை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
தென்உக்ரைனில் உள்ள அதிகாரியொருவர் கொத்துக்குண்டுகள் கிடைத்துள்ளன என தனது தளபதி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
கொத்துக்குண்டுகள் சென்றடைந்துள்ளதை பென்டகனும் உறுதி செய்துள்ளது.
மொஸ்கோ இதனை கண்டித்துள்ளது.
கொத்துக்குண்டு தனக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் தானும் அதனை பயன்படுத்தவேண்டியிருக்கும் என ரஸ்யா எச்சரித்துள்ளது.
ரஸ்யா தான்கைப்பற்றியுள்ள பெருமளவு நிலத்தில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதால் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவது நியாயமானது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
கொத்துக்குண்டுகள் ரஸ்ய படையினரை மேலும் மனச்சோர்வடையச்செய்யும் நிலைமையை உக்ரைன் படையினருக்கு சாதகமாக மாற்றும் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் உக்ரைனின் பகுதிகளை மீள ஆக்கிரமிப்பதற்கு கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவோம் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.