சுவீடனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பைபிளை எரிப்பதற்கு அந்த நாடு அனுமதிவழங்கியுள்ளது.
இன்று இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பைபிளை எரிப்பதற்கு அனுமதிகோரிய நபர் ஒருவருக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுவீடனின் தேசிய வானொலி தெரிவித்துள்ளது.
சுவீடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூதகாங்கிரஸ் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற ஆத்திரமூட்டும் இனவெறி மதவெறி நடவடிக்கைகளிற்கு எந்த நாகரீக சமூகத்திலும் இடமில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களின் ஆழமான மத மற்றும் கலாச்சார உணர்வுகளின் மீது ஏறிமிதிப்பது சிறுபான்மையினர் விரும்பத்தகாதவர்கள் மதிக்கப்படாதவர்கள் என்ற தெளிவான செய்தியை தெரிவிக்கின்றது எனயூத அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஜனாதிபதியும் இதனை கண்டித்துள்ளார்.
ஜூன் மாத இறுதியில் சுவீடனில் உள்ள மசூதிக்கு வெளியே நபர் ஒருவர் குரானை எரித்ததை தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்றன.