உலக பெருங்கடல்களின் நிறம் மாறிவருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் உலகப் பெருங்கடலில் 56 வீதமான பகுதியின் நிறம் மாறியுள்ளதாக நேச்சர் எனும் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கோட்டிற்கு அருகிலுள்ள பெருங்கடல்களில் பச்சை நிறம் அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் துணைக்கோளம் வழி எடுக்கப்பட்ட காட்சிகள் ஆராயப்பட்டதில் இது தெரியவந்துள்ளதாக குறித்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலின் பல்லுயிர் சமூகத்தில் மாற்றம் ஏற்படுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் நிறங்களின் மாற்றத்தை மேலும் ஆராய வேண்டும் என்றாலும் அதற்குப் பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.