day, 00 month 0000

அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்கும் கனடா

உக்ரைன் தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா தெரிவித்துள்ளது.

போரில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

லாட்வியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கொத்தணி குண்டு பயன்பாட்டை தடை செய்யும் சர்வதேச பிரகடனம் பின்பற்றப்பட வேண்டுமெனவும், அதனை கனடா முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை எதிர்க்கும் உலக நாடுகளின் வரிiயில் கனடா முன்னிலை வகிக்கின்றது.

இந்த பிரகடனம் உருவாக்கப்படும் போதும் கனடா பூரணமாக ஆதரவினை வெளியிட்டு வந்திருந்தது.

போரின் போது பல்வேறு ஆயுத உதவிகள் வழங்கப்படுவதனை புரிந்து கொண்டுள்ளதாகவும், எனினும், கொத்தணி குண்டு பயன்பாட்டை அனுமதிக்கப்பட முடியாத எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு கொத்தணி குண்டுகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உக்ரைன் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கத் தயங்கப் போவதில்லை என ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்