day, 00 month 0000

கனடாவில் இலங்கை இளைஞருக்கு நேர்ந்த சோகம்

உயர் கல்வியைத் தொடருவதற்காக கனடா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 28 வயதான எம்.எச். வினோஜ் யசங்க ஜெயசுந்தர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்ற வினோஜ் யசங்க , கலாநிதி பட்டம் பெறுவதற்காகச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

கனடாவின் வான்கூவர் நகரில் மது போதையில் வாகனம் ஓட்டியவரின் கவனக்குறைவால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை உயிரிழந்த இளைஞர் கலிபோர்னியாவிலுள்ள ஆப்பிள் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளதாக  கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயர் கல்விக்காக சென்ற இளையர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த  இளைஞனின் உடல் நேற்றியதினம் (11) இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்