day, 00 month 0000

வாக்னர் குழுவின் தலைவரை புட்டின் சந்தித்தார்

வாக்னர் கூலிப்படையின் புட்டின் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி இடம்பெற்று ஐந்து நாட்களின் பின்னர் கூலிப்படையின் தலைவரை  ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்தித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்னர் புட்டின் கதையின் மிகச்சமீபத்தைய பரபரப்பு குறித்து பிபிசியின் ரஸ்யாவிற்கான பிரிவின் ஆசிரியர் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

ஆகவே நான் இதனை உங்களிற்கு மிக தெளிவாக தெரிவிக்கின்றேன்.

24ம் திகதிஜூன் அதிகாலை கலகத்தின் போது புட்டின்  வாக்னர் குழுவின் தலைமை துரோகம் இழைத்துவிட்டதாகவும் முதுகில் குத்திவிட்டதாகவும்  புட்டின் குற்றம்சாட்டினார்,பின்னர் அன்றைய தினம் ரஸ்ய விமானங்களை வாக்னர் குழுவினர் சுட்டுவீழ்த்தி விமானிகளை கொன்றனர்.

அதன் பின்னர் கூலிப்படையினர் மொஸ்கோவிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டவேளை கிரெம்ளினும் வாக்னரும் உடன்பாட்டிற்கு வந்தனர்,கலகம் முடிவிற்கு வந்தது எவரும் கைதுசெய்யப்படவில்லை தண்டிக்கப்படவில்லை. 

யெவ்ஜென்சி பிரிகோசின் கைதுசெய்யப்பட்டு விலங்கிடப்படவில்லை,கிளர்ச்சிக்காக பொலிஸ்நிலையத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

புட்டினிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு ஐந்து நாட்களின்பின்னர் வாக்னர் குழுவின் தலைவர் தனது தளபதிகளுடன் புட்டினுடன்ஒரே மேசையில் அமர்ந்து உரையாடினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது எங்களுக்கு தெரியாது அந்த சந்திப்பு எவ்வாறு முடிவடைந்தது என்பதும் எங்களுக்கு தெரியாது

 சமீப நாட்களாக வாக்னர் குழுவின் தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில்ரஸ்ய ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன

 

சென்பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள வாக்னர் தலைவரின் மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட படங்களை ரஸ்ய அதிகாரிகள் சமூக ஊடகங்களுக்கும்  ஊடகங்களுக்கும் வழங்கியுள்ளனர்.

தங்கக்கட்டிகள் ஆயுதங்கள் விக்குகள் போன்றவற்றை ரஸ்ய தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.

பிரிகோஜின் அவர் தெரிவிப்பது போல ரொபின்கூட் இல்லை அவர் குற்றபின்னணி கொண்ட வர்த்தகர் அவரது செயற்பாடுகள் சந்தேகத்திற்கு இடமானவை என சட்டவிரோதமானவை என ரஸ்ய ஊடகமொன்று  தெரிவித்துள்ளது.

24ம் திகதி கலகத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்காக புட்டினிற்கும் வாக்னர் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு என்ன?

அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் வாக்னர் குழுவின் தலைவர் பெலாரசிற்கு செல்லவேண்டும்.

கடந்த வாரம் பெலாரஸ் ஜனாதிபதி  வாக்னர் குழுவின் தலைவர் தனது நாட்டில் இல்லை என தெரிவித்தார்.

அவர்கள் பெலாரஸ் வந்துசேரக்கூடும் ஆனால் இன்னமும் வரவில்லை என்பதே அதுவே அதன் அர்த்தம்.

வாக்னர் எங்கே பிரிகோஜின் எங்கே அவர்களின் திட்டம் என்ன அவர்களுக்கும் புட்டினிற்கும் இடையிலான இணக்கப்பாடு என்ன?

எனக்கு தெரிந்திருந்தால் நல்லது என நான் நினைக்கின்றேன்,

தற்போது நான் தெரிவிப்பது இதுதான் - ரஸ்யாவின் அடுத்த தவிர்க்க முடியாத அத்தியாயத்திற்காக காத்திருங்கள் 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்