day, 00 month 0000

'தம்ஸ் அப்' இமோஜி கையெழுத்துக்கு இணையானது என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பு

'தம்ஸ் அப்இமோஜி ஆனது கையெழுத்தாக செல்லுபடியாகும் என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுஒப்பந்த படிவமொன்றுக்கு தம்ஸ்அப் இமோஜியை பதிலாக அனுப்பிவிட்டுஒப்பந்த்தை நிறைவேற்றாத நபருக்கு 82,000 கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சஸ்கட்சேவன் மாகாணத்தின் உயர் நீதிமன்றம்  கடந்தவாரம் இத்தீர்ப்பபை அளித்துள்ளது.

2021 மார்ச்சில் கென்ட் மிக்கல்பரோ என்பவர், 86 தொன் ஆளிவிதை எனும் தானியத்தை வாங்குவதற்கு விளம்பரம் செய்திருந்தார்.

இது தொடர்பாக கிறிஸ் ஆச்சர் எனும் விவசாயியடன் மிகில்பரோ தொலைபேசியில் உரையாடினார்அதன்பின் ஒரு புசல் 17 டொலர்கள் வீதம் நவம்பர் மாதம் ஆளி விதை விநியோகிப்பதற்கான செய்வற்கான ஒப்பந்தப் படிவமொன்றின் படத்தை தொலைபேசி மூலம்அனுப்பி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துமாறு மிகில்பரோ கோரினார்.

அதற்கு தம்ஸ் அப் இமோஜி ஒன்றை பதிலாக அனுப்பினார் விவசாயியான ஆச்சர்.  எனினும்அவர் ஆளிவிதையை விநியோகிக்கவில்லை.

இதனால்ஒப்பந்தத்தை நிறைவேற்றாதமைக்காக நஷ்ட ஈடு கோரி மிகில்பரோ வழக்குத் தொடுத்தார்.

தான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்ஒப்பந்தப்படிவத்தை பெற்றுக்கொண்டதை  தெரிவிப்பதற்காக மாத்திரமே தான் அந்த இமோஜியை அனுப்பியதாக விவசாயி ஆச்சர் கூறினார்.

இமோஜி விடயத்தில் ஆச்சர் ஒரு நிபுணர் அல்லர் என அவரின் சட்டத்தரணி வாதாடினார்.

எனினும்தம்ஸ் அப் இமோஜியை ஒரு கையெழுத்தாக ஏற்றுக்கொள்வதாக நீதியரசர் திமோதி கீன் தீர்ப்பளித்தார்.

இதனால் மேற்படி ஒப்பந்தத்தை ஆச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார் என நீதியரசர் கூறியதுடன், ஒப்பந்தத்தை  நிறைவேற்றாதமையால் ஆச்சருக்கு 82,000 கனேடிய டொலர் (சுமார் 1.95 கோடி ரூபாஅபராதத்தையும் விதித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்