day, 00 month 0000

ஆசியாவிலேயே ‘இரண்டாவது நம்பிக்கையான பயணிகளாக’ இந்தியர்கள் இடம் பிடிப்பு

ஆசியாவிலேயே ‘இரண்டாவது நம்பிக்கையான பயணிகளாக’ இந்தியர்கள் இடம் பிடித்துள்ளதாக புகழ்பெற்ற பயண நிறுவனமான Booking.com அறிவித்துள்ளது.

Booking.com ஆசிய பசிபிக் அல்லது APAC பிராந்தியங்களில் நம்பிக்கையுடன் பயணிப்பவர்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பினை மேற்கொண்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு APAC நாடுகளில் மொத்தம் 11 பயணச் சந்தைகளை ஆய்வு செய்தது.

கணக்கெடுப்பின்படி, பெரும்பாலான இந்தியர்கள் சிக்கலான உலகளாவியல் சவால்களை பற்றி கவலைப்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் ஹொங்கொங் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

மேலும், ஆறாவது இடத்தினை அவுஸ்திரேலியாவும், ஏழாவது எட்டாவது இடங்களை நியூசிலாந்து மற்றும் கொரியாவும் பெற்றுள்ளது.

இதேவளை, ஜப்பான், வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் இறுதி மூன்று இடங்களையும் பிடித்துள்ளதாக பயண நிறுவனமான Booking.com குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதில் சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் 43% இந்திய பயணிகள் தங்கள் சொந்த நாட்டை ஆராய்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 71% பேர் வட இந்தியாவையும், 60% தென்னிந்தியாவையும், 41% மேற்கு இந்தியாவையும், 37% வடகிழக்கு இந்தியாவையும், 16% கிழக்கு இந்தியாவையும் 13% மத்திய இந்தியாவையும் ஆராய விரும்புகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்