day, 00 month 0000

உலகக் கிண்ண தகுதிகாண் சிறப்பு அணியில் பெத்தும், ஹசரங்க, தீக்ஷன

ஸிம்பிபாப்வேயில் நடைபெற்ற 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் சிறப்பு அணிக்கு இலங்கை வீரர்கள் மூவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, சுழல்பந்துவீச்சாளர்களாக வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகிய 3 இலங்கையர்களே சிறப்பு அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

8 போட்டிகளில் விளையாடிய பெத்தும் நிஸ்ஸன்க 2 சதங்கள், 2 அரைச் சதங்கள் உட்பட 417 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 7 போட்டிகளில் மூன்று 5 விக்கெட் குவியல்களுடன் 22 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 8 போட்டிகளில் மூன்று 4 விக்கெட் குவியல்களுடன் 21 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவர்கள் இருவர் மாத்திரமே 20 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தியிருந்தனர்.

உலகக் கிண்ண தகுதிகாண் சிறப்பு அணியில் ஸிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 3 வீரர்கள் இடம்பெறுவதுடன் ஸ்கொட்லாந்து வீரர்கள் இருவர் இடம்பெறுகின்றனர்.

அணி விபரம் (துடுப்பாட்ட வரிசையில்)

1. பெத்தும் நிஸ்ஸன்க (இலங்கை) 417 ஓட்டங்கள், சராசரி 69.50

2. விக்ரம்ஜித் சிங் (நெதர்லாந்து) 326 ஓட்டங்கள், சராசரி 40.75, 6 விக்கெட்கள்

3. ப்றெண்டன் மெக்முலென் (ஸ்கொட்லாந்து) 364 ஓட்டங்கள், சராசரி 52.00, 13 விக்கெட்கள், சராசரி 17.52

4. சோன் வில்லியம்ஸ் (ஸிம்பாப்வே) 600 ஓட்டங்கள், சராசரி 100.00, 3 விக்கெட்கள்

5. பாஸ் டி லீட் (நெதர்லாந்து) 285 ஓட்டங்கள், 47.50, 15 விக்கெட்கள், சராசரி 22.13

6. சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), 325 ஓட்டங்கள்,  சராசரி  65.00, 9 விக்கெட்கள்,  சராசரி  29.77 

7. ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (நெதர்லாந்து) 314 ஓட்டங்கள், சராசரி 62.00

8. வனிந்து ஹசரங்க (இலங்கை) 22 விக்கெட்கள், சராசரி 12.90

9. மஹீஷ் தீக்ஷன (இலங்கை) 21 விக்கெட்கள், சராசரி 12.23

10. கிறிஸ் சோல் (ஸ்கொட்லாந்து) 11 விக்கெட்கள், சராசரி 25.00

11. ரிச்சர்ட் எங்கராவா (ஸிம்பாப்வே) 14 விக்கெட்கள், சராசரி 19.28


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்