day, 00 month 0000

இறந்த ஒருவரை அடக்கம் செய்ய கோடிக்கணக்கில் செலவழிக்கும் நகரம்

ஹொங்கொங் நகரில் வாழும் ஒரு நபரை விட இறந்த ஒரு நபருக்கான இடத்தை தேடுவது விலை அதிகமானது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் மிக விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் சந்தை என்று தெரிவிக்கப்படும் ஹொங்கொங் நகரில் எட்டு குடும்ப உறுப்பினர்களின் அஸ்தியை அடக்கம் செய்யக்கூடிய இடத்தின் அளவு சுமார் 430,000 அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதன்படி, குறித்த தொகை சுமார் 130 கோடி இலங்கை ரூபாய் ஆகும்.

Hong Kong

 ஹொங்கொங்கில் இறந்த நபரின் அஸ்தியை அடக்கம் செய்ய, செருப்புப் பெட்டி அளவுள்ள ஒரு இடத்தை வாங்க, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் 53,000 அமெரிக்க டொலர்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது சுமார் ஒரு கோடியே 60 இலட்சம் இலங்கை ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவரின் அஸ்தியை அடக்கம் செய்யக்கூடிய இடத்தின் அளவு சுமார் 76000 அமெரிக்க டொலர்கள் எனவும் இது சுமார் இரண்டு மில்லியன் 30 இலட்சம் இலங்கை ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்