உலகின் மிக ஆபத்தான தாவரங்களில் ஒன்றான Gympie-Gympie பிரித்தானியாவுக்கு எடுத்து வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
நார்தம்பர்லேண்ட் பகுதியில் அமைந்துள்ள விஷப்பூங்காவில் தான் இந்த தாவரம் உள்ளது.
இயற்கையாகவே அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவின் மழைக்காடுகளில் இந்த செடி செழித்து வளர்வதை காணலாம்.
அந்த தாவரத்தின் முடியிழைக்கு ஒப்பான முட்கள் பட்டாலே, உடல் மொத்தம் நெருப்பில் விழுந்தது போன்ற வலி ஏற்படுமாம்.
1866 ஆம் ஆண்டில் மக்கள் முதன்முதலில் இந்த தாவரத்தை கண்டுபிடித்தபோது, ஒரு சாலை சர்வேயரின் குதிரை அதன் மீது உரசியதாக கூறப்படுகிறது.
விஷச் செடி பட்ட இரண்டு மணி நேரத்திற்குள், குதிரை கடுமையான வலியை அனுபவித்து உயிரிழந்திருக்கிறது.
Gympie-Gympieயை தொட்டால் நெருப்பில் நமது உடல் எரிவது போன்ற வலியை கொடுக்கும், அடுத்த 20 முதல் 30 நிமிடங்களில் இது மிக மோசமாகிறது மற்றும் வாரங்கள் அல்லது மாதங்கள் கூட நீடிக்கும்.
இந்த செடி தனிநபர்களில் தற்கொலை எண்ணங்களைத் தூண்டுவதாகவும் அறியப்படுகிறது.
Gympie-Gympie செடி காரணமாக முன்னர் அதிக வலியை அனுபவித்த ஒரு நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.