cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

உலகிற்கு அறிமுகமாகும் புதிய நாணயம்

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முன்னுரிமை புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

நாணயமானது தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயம் என்றும், கடன் அடிப்படையிலான டாலரிலிருந்து மிகவும் வேறுபட்டது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை ஜூன் 2009 இல் பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கியது.

2050 ஆம் ஆண்டளவில் உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இது அமைந்துள்ளது.

மேலும் 2010 இல், தென்னாப்பிரிக்காவும் BRICS இல் இணைந்தது, இப்போது உலகின் முன்னணி வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் சக்திவாய்ந்த கூட்டணியாகக் கருதப்படுகிறது.

தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயத்தினை அறிமுகப்படுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது கடன் அடிப்படையிலான டாலருக்கு முற்றிலும் மாறாக அதிக மதிப்புள்ள நாணயமாக இதனால் உலகின் பல நாடுகள் பிரிக்ஸ் கூட்டணியில் இணைய தயாராக உள்ள பின்னணியில் புதிய கரன்சி யூனிட் அறிமுகம் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அர்ஜென்டினா, அல்ஜீரியா, பஹ்ரைன், வங்கதேசம், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளன.

மேலும், பிரான்ஸ், கியூபா, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட மேலும் 41 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் புதிய கரன்சி அறிமுகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் தங்கத்தின் அடிப்படையிலான புதிய நாணயமானது வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பாக புதிய பரிவர்த்தனையில் தங்கத்தின் மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் ஒற்றை நாணய அலகு பலப்படுத்தப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்