day, 00 month 0000

துருக்கி செல்கிறார் உக்ரேன் ஜனாதிபதி

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக துருக்கி பயணிக்கவுள்ளார்.

கருங்கடல் தானிய ஒப்பந்தம் மற்றும் ரஷ்யாவின் தாக்குதல போர் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என துருக்கிய அரசு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை ரஸ்யாவின் தாக்குதலை எதிர்த்து போராடுவதற்கு உக்ரேன் தலைநகர் கீவ்விற்கு பெருமளவான ஆயுதங்கள் தேவைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்கா க்ளஸ்ட்டர் (cluster) வெடிமருந்துகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்