day, 00 month 0000

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா

உலக பொருளாதார வல்லரசுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2050 ஆம் ஆண்டு இந்தியா உலக பொருளாதார வல்லரசுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என பீ.டப்ளியூ.சீ. நிறுவனத்தின் 2050 உலகம் என்ற அறிக்கையை மேற்கோள்காட்டி யாஹூ பைனான்ஸ் இணையதளம் கணித்துள்ளது.

அந்த அறிக்கைக்கு அமைய 2050 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வல்லரசுகளின் பட்டியலில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பீ.டப்ளியூ.சீ. நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில், இந்தோனேசியா மற்றும் பிரேசில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.

மேலும் 2050 ஆம் ஆண்டில், வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் நைஜீரியா நாடுகளின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடையும் என்பதுடன் அந்த நாடுகள் உலகப் பொருளாதார பலம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 12 இடங்களை நோக்கி முன்னேறும்.

வியட்நாம் 32 வது இடத்தில் இருந்து 20 வது இடத்தையும் பிலிப்பைன்ஸ் 28 வது இடத்தில் இருந்து 9 வது இடத்தையும் நோக்கி முன்னேறும்.

நைஜீரியா 22 வது இடத்தில் இருந்து முன்னேறி 14-வது இடத்தை பிடிக்கும்.

2050ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் 130 சதவீதம் வளர்ச்சியடையும் எனவும் அதில் 20 சதவீதம் சீனா பங்களிப்பாக இருக்கும்.

2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் உலக பொருளாதாரத்திற்கான பங்களிப்பு 15 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 12 சதவீதமாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு பீ.டப்ளியூ.சீ நிறுவனத்தின் அறிக்கைக்கு அமைய உலக பொருளாதாரத்தில் சீனா முதல் இடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மேலும் 2016 ஆம் ஆண்டு அறிக்கைக்கு அமைய உலக பொருளாதாரத்தில் நான்காவது இடத்தில் இருக்கும் ஜப்பான் 2050 ஆம் ஆண்டில் 8 வது இடத்தை நோக்கி பின்னுக்கு செல்லும்.

5வது இடத்தில் இருக்கும் ஜேர்மனி 2050 ஆம் ஆண்டு 9வது இடத்தை நோக்கி பின்னுக்கு செல்லும்.

6வது இடத்தில் இருக்கும் ரஷ்யா 2050 ஆம் ஆண்டிலும் அதே இடத்தில் இருக்கும்.

9வது இடத்தில் இருக்கும் பிரித்தானியா 10வது இடத்தை நோக்கி பின்னுக்கு தள்ளப்படும் எனவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்