இஸ்ரேலிய படையினர் சிறுவர்களை கொல்வது குறித்து வருத்தப்படவில்லை என பிபிசியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்குகரையின் ஜெனின் அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள பிபிசியின் நிகழ்ச்சிதொகுப்பாளர் இங்கு கொல்லப்பட்ட 12 பாலஸ்தீனியர்களில் ஐந்து சிறுவர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை கொல்வது குறித்து இஸ்ரேலிய படையினர் வருத்தமடையவில்லை அவர்கள் அது குறித்து மகிழ்ச்சியடைகின்றனர் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நவ்டாலி பெனெட் உடனான நேர்காணலின்போது அஞ்சனா கட்ஜில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் இதனை ஒரு இராணுவநடவடிக்கை என அழைக்கின்றது ஆனால் சிறுவர்கள் கொல்லப்படுவது எங்களுக்கு தெரியும்,நால்வர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இஸ்ரேலிய இராணுவம் இதனை செய்வதற்காகவா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது 16-18 வயதினரை கொல்வதற்காகவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் ஜெனின் முகாமில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என தெரிவித்துள்ளார்.