day, 00 month 0000

சக்சுரின் யானையின் கிசிச்சைக்கான செலவுகளை பொறுப்பேற்றார் தாய்லாந்து மன்னர்

இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட சக்சுரின் யானையின் சிகிச்சைக்கு தேவையான நிதியை வழங்குவதற்கு தாய்லாந்து மன்னர்மகா வஜிரலொங்கோர்ன் முன்வந்துள்ளார்.

தாய்லாந்து சூழல்விவகார அமைச்சர் வரவுட் சில்பா ஆர்ச்சா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட 30வயது யானை தற்போது லம்பொங் மாகாண தாய்யானைகள் சரணாலயத்தின் யானைகள் மருத்துவமனையின் பராமரிப்பின் கீழ் உள்ளது.

யானை நன்றாக உணவருந்துகின்றது அதனால் நிற்கவும் அமரவும் முடிகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர்  யானையால் முன் இடதுகாலை வளைக்கமுடியவில்லை அதன் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் காயங்கள் காணப்படுகின்றன என மிருகவைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சக்சுரின் மீண்டும் வலுவான நிலைக்கு திரும்பும்வரை நாங்கள் அதனை பராமரிப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சக்சுரினை தற்போது 30 நாள் புனர்வாழ்விற்கு உட்படுத்தியுள்ளனர்,யானைக்கு வேறு நோய்கள் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்கான வைத்தியபரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே அதனை ஏனைய யானைகளுடன் பழகஅனுமதிக்கவுள்ளதாக மிருகவைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரே பொதுமக்கள் அதனை பார்வையிடுவதற்கு அனுமதிக்கவுள்ளதாக மிருகவைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்