day, 00 month 0000

வன்முறைகளை நிறுத்துங்கள் -பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் பாட்டி வேண்டுகோள்

பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் பாட்டி தனது பேரனின் உயிரிழப்பை தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடசாலைகளை சேதப்படுத்தவேண்டாம்,பேருந்துகளை சேதப்படுத்தவேண்டாம் தாய்மார்களே பேருந்தினை பயன்படுத்துகின்றனர் என பிரான்ஸ் தலைநகரில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் மேர்சூக்கின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்

நடியா என தன்னை அடையாளப்படுத்தியுள்ள அவர் பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜன்னல்களை பேருந்துகளை பாடசாலைகளை சேதப்படுத்தாதீர்கள் எங்களிற்கு அமைதி வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது பேரனை கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து மீது தான் கடும்கோபத்தில் உள்ளதாகவும் எனினும் பொலிஸார் மீது பொதுவாக எந்த கோபமும் இல்லை என தெரிவித்துள்ள அவர் பிரான்சின் நீதிஅமைப்பின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்