day, 00 month 0000

ஜப்பானில் மருத்துவரின் பரிந்துரை இன்றி கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்ய அனுமதி

ஜப்பானில் மருத்துவரின் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்ய அந்நாட்டு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் முதலில் பரீட்சாத்த முறையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டள்ளது.

உடனடி கருத்தடை மாத்திரையை விற்பனை செய்ய ஜப்பான் சுகாதார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியது.

கருத்தடை மாத்திரைகளை கொள்வனவு செய்ய பல நிபந்தனைகள் நடைமுறையில் இருந்து வந்தன. இந்த மாத்திரைகளை பெண் அல்லது வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட பெண் கொள்வனவு செய்தால், கட்டாயம் மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்ற நிபந்தனையும் காணப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவரின் பரிந்துரை இன்றி கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில், மருத்துவரின் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்ய ஜப்பான் அரசாங்கம் சற்று தளர்வுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்