day, 00 month 0000

குரோசியா அணி வீரரை ஒப்பந்தம் செய்தது மென்செஸ்டர் சிட்டி

குரோசியா நாட்டை சேர்ந்த 29 வயதான நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மேடியோ கோவாசிச்சை (Mateo Kovačić) இங்கிலாந்தின் முன்னணி கழகமான மென்செஸ்டர் சிட்டி 25 மில்லியன் யூரோ அடிப்படியில் நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

மேடியோ கோவாசிச் (Mateo Kovačić) ப்ரிமியர் லீக் கழகமான செல்சி (chelsea) அணியின் முன்னாள் வீரராவார்.

மேடியோ கோவாசிச் (Mateo Kovačić) கடந்த 2020-2021 பருவகாலத்தில் நடைபெற்ற சாம்பியன் லீக்கில் வெற்றி பெற்ற செல்சி அணியில் முக்கிய பங்குவகித்தார்.

மேலும், கடந்த 2021ல் கழகங்களுக்கு இடையிலான உலக கிண்ண போட்டியிலும் 2018 - 19ல் நடைபெற்ற யூரோ கால்பந்தாட்ட சாம்பியன் ஷிப் போட்டியிலும் வெற்றி பெற்ற செல்சி அணியில் முக்கிய பங்குவகித்தமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்