day, 00 month 0000

இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டில் ஈடுபடுமாறு கனடாவிலுள்ள தமிழர்களிடம் கோரிக்கை

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயன்முறைகளில் ஆக்கபூர்வமாக ஈடுபடுமாறு கனடாவிலுள்ள தமிழ் மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்காபரோவில் உள்ள சந்திரமௌலீஸ்வர சிவன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவில் ஆலய பிரதம குருவின் அழைப்பின் பேரில் ரொராண்டோவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் 1500க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் பக்தர்கள், மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபைகளின் ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய தூதரக அதிகாரி, கனடாவில் உள்ள இலங்கைத் தமிழ் சமூகம் கனேடிய பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஆற்றல்மிக்க சக்தியாக மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

வலுவான தமிழ் வர்த்தக சமூகம் மற்றும் உயர் கல்வியறிவு பெற்ற இளம் தமிழ் தொழில் வல்லுநர்கள் இலங்கைத் தமிழர்களை கனேடிய சமூகத்துடன் சுமூகமாக இணைப்பதற்கான உந்து சக்தியாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் ஆக்கபூர்வமாக ஈடுபடுமாறு இலங்கைத் தமிழ் கனேடிய சமூகத்தினரிடம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்