cw2
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6வது மாதம் தொடங்க உள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷியா ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த உதவி டிரோன்கள், ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களுக்கான ஒப்பந்தங்களுக்கு நிதியளிக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை உக்ரைனுக்கு 15க்கு மேற்பட்ட ராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.