day, 00 month 0000

இந்தோனேசியாவில் உயிரிழந்த இலங்கை தமிழ்பெண் - உடலை அடக்க செய்வதற்கு அனுமதிக்க மறுத்த இந்தியர்கள்

இந்தோனோசியாவில் இலங்கை தமிழ் அகதியொருவர் நோயினால் உயிரிழந்தவேளை அவரது உடலை தங்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படும் பகுதியில் அடக்கம் செய்ய அங்கு வாழும் இந்தியர்கள் மறுத்துள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

கடந்த 2012ம் ஆண்டு இந்தோனேசியாவில் தஞ்சமடைந்து மெடான் நகரின் பெலாவான் முகாமில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த  தமிழ் ஏதிலியான அசோக்குமார் லலிதா அவர்கள் நோயுற்று தகுந்த மருத்துவமின்றி  சாவடைந்துள்ளார்

இந்தோனேசியாவிலே நீண்ட காலமாகஇந்துக் கோயில்கள் வைத்து நடாத்தும் இந்தியப் பின்னணி கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள். இறந்த இந்த சகோதரியின் உடலை அவர்களின் தகனம் செய்யும் இடத்திலே அடக்கம் செய்வதற்கு அங்குள்ள  இலங்கை தமிழ் உறவுகளஉறவுகள் அணுகிய போது)

தங்களிடத்தில் ஒருபோதும் தகனம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டனர்.

ஆனால் அங்கே பல தசாப்தங்களாகவசித்து வரும் பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர்  மனித நேயத்தோடு சகோதரியின் உடலைத்  தகனம் செய்வதற்கு தமது மயானத்தில் அனுமதித்து தோழமை உணர்வை வெளிப்படுத்தினர்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்