cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

பிரதமர் மோடிக்காக வாஷிங்டனில் திரண்ட இந்திய அமெரிக்கர்கள்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வாஷிங்டனில் இந்தியர்கள் மற்றும்  அமெரிக்கர்கள் என லட்சக்கணக்கான மக்கள் இணைந்து ஒற்றுமை பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி ஜூன் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு செல்லவுள்ள பிரதமரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்று அதன் பின்னர்  22 ஆம் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கவுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் நியூயார்க் உட்பட  20 பெரிய நகரங்களில் இந்திய மேற்றும் அமெரிக்கர்கள் ஒன்று கூடி அவரை வரவேற்கும் முகமாக ஒற்றுமை பேரணியை நடத்தியுள்ளனர்.

அந்த பேரணியில் சிறுவர்,  சிறுமிகள் மற்றும் முதியவர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

அதன் போது மக்கள் இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு தேசிய கொடிகளை ஏந்தியவாறும், பிரதமர் மோடியின் உருவம் கொண்ட போஸ்டர்கள் மற்றும் சமூகம் சார்ந்த பேனர்களை தங்கியவாறும் சென்றுள்ளனர்.

அதுமட்டுமன்றி, மோடி மோடி, வந்தே மாதரம் மற்றும் வந்தே அமெரிக்கா உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

அந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ள நிலையில், அவர்களில் சிலர் ஹர் ஹர் மோடி என்ற பாடலுக்கு நடனம் ஆடியவாறும் சென்றுள்ளனர்.

 

 

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்