உகண்டாவில் பாடசாலைஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகிலுள்ள கசேசே மாவட்டத்தின் எம்போன்ட்வே நகரிலுள்ள இடைநிலைப் பாடசாலை ஒன்றில், நேற்று இரவு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஏடிவ் எனும் இயக்கமே இத்தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களில் சிலர் எரித்தும், வெட்டியும் கொல்லப்பட்டுள்ளனர் என உகண்டா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் டிக் ஒலும் தெரிவித்துள்ளார்.