உக்ரைன் எதிர் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் தெற்கு எல்லைப்பகுதியான 'பிரையான்ஸ்க்' பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறி வைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷ்யா அழித்ததாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரையான்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுனர் அலெக்சாண்டர் போகோமாஸ் தெரிவிக்கையில் , நோவோசிப்கோவ் மாவட்டத்தில் உள்ள 'ட்ருஷ்பா' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலை ரஷ்ய வான்வெளி பாதுகாப்புப் படைகள் முறியடித்தன.
எங்கள் இராணுவத்தின் நடவடிக்கைக்கு நன்றி. இந்த தாக்குதலில் 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்துள்ளார்.