அவுஸ்திரேலிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் லிடியா தோர்ப், நாடாளுமன்றத்திற்குள் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பெண்கள் சேவையாற்ற நாடாளுமன்றம் பாதுகாப்பான இடம் அல்ல. நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் வாகன், ஒரு முக்கிய தலைவர் எனவும் தன்னை அநாகரீகமான கருத்துக்களை கூறி துன்புறுத்துவதாகவும், தொடக்கூடாத இடத்தில் தொடுவதாகவும் கூறியுள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் வாகன் மறுத்துள்ளார். குற்றச்சாட்டுகளால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும், அவை முற்றிலும் பொய்யானவை எனவும் கூறியுள்ளார்.
லிடியா தோர்ப் நேற்று முன்தினம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்ததுடன் நாடாளுமன்றம் தடை விதித்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக குற்றச்சாட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
எனினு நேற்று மீண்டும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள எனது அலுவலகத்தில் இருந்து தனியாக வெளியே வரவே நான் பயப்படுவேன்.
நான் எப்போதும் ஒருவரது துணையுடன் கட்டிடத்தைச் சுற்றி வருவேன்.
பலர் இதுபோன்ற அனுபவங்களை எதிர்கொண்டுள்ளனர். தங்களின் தொழில் பாதிக்கப்படும் என்பதால், எவரும் தமக்கு நேர்ந்த நிலைமை குறித்து வெளியில் கூறுவதில்லை என லிடியா தோர்ப் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை அடுத்து டேவிட் வாகன் லிபரல் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டானி ஹிக்கின்ஸ் என்ற கட்சி ஊழியர், நாடாளுமன்ற அலுவலக அறையில் சக பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.
இதனைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் வாகன் நேற்று உரையாற்றிக்கொண்டிருந்த போது சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான லிடியா தோர்ப் குறுக்கிட்டு அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 63 வீதமான பெண் உறுப்பினர்கள் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தப்படுவதாக அரசாங்கம் நியமித்த குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.