day, 00 month 0000

3000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மம்மி கண்டுபிடிப்பு

பண்டைய எகிப்து நாகரிகத்தில் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்கும் முன், அதனை பதப்படுத்தி வைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. 

இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உடல் 'மம்மி' என்று அழைக்கப்படுகின்றது. 

எகிப்தில் உள்ள பிரமிடுகளில் 'டூடன் காமுன்' உள்ளிட்ட பல்வேறு மன்னர்களின் 'மம்மி' உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 'மம்மி' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அந்த உடலோடு குப்பிகள், சோளம், கோகோ இலைகள் மற்றும் விதைகள் ஆகியவையும் புதைக்கப்பட்டிருந்தன.

இந்த 'மம்மி' உடலானது கி.மு. 1,500-ல் இருந்து கி.மு. 1,000 வரையிலான இடைப்பட்ட காலத்தில் லிமா பள்ளத்தாக்கு பகுதிகளில் உருவான 'மஞ்சாய்' என்ற கலாசாரத்தை சேர்ந்ததாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்