day, 00 month 0000

உக்ரைன் அணை தகர்ப்பு...உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...ஐ.நா எச்சரிக்கை

உக்ரைன் அணை தகர்ப்பால்  உலகளாவிய ரீதியில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான  வாய்ப்புக்கள் காணப்படுவதாக  ஐ.நா. தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத் காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6 ஆம் திகதி உடைந்த நிலையில் 18 கியூபிக் கி.மீ. பரப்பளவு தண்ணீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது. 

இந்த அணை உடைந்ததை தொடர்ந்து உக்ரைனும், ரஷ்யாவும்  பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. 

இந்நிலையில் இது குறித்து  ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், இந்த தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன்  உணவுப் பொருட்களின் விலையும் உயர்வடையும். 

அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சனைகளும் ஏற்படலாம் என்றும்  தெரிவித்துள்ளார். 

கோதுமை, பார்லி, சோளம், ராப்சீட், ராப்சீட் எண்ணெய், சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா முக்கிய இடம் வகிக்கின்றன. 

இந்த உடைப்பினால் இனி பயிரிடும் காலங்களில் இவற்றை விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் மிகப்பெரிய சிக்கல்  ஏற்பட போவது  தவிர்க்க முடியாதது.

அத்துடன், சுமார் 7 லட்சம் பேர் வரை குடி நீருக்காக அணைக்கு பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை நம்பியுள்ள நிலையில் அணை உடைப்பின் காரணமாக சுத்தமான குடிநீர் இன்றி மக்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்பும் சிறுவர்களிற்கு  அதிகமான பாதிப்பும் ஏற்படும்.

மேலும், ஜெனிவா உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டுள்ள  சட்டங்களுக்கு எதிரான வகையில், சிவிலியன் உட்கட்டமைப்புக்கு எதிராக இந்த பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. 

யார் இந்த அணை தகர்ப்பினை செய்திருந்தாலும் அது ஜெனிவா உடன்படிக்கைகளை மீறியதாகும் என்றும் கிரிஃபித்ஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்