day, 00 month 0000

டெல்லி, இமச்சால பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம்

டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடஇந்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் தென்கிழக்கு பகுதியான கிஸ்த்வாரில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய தலைநகர் டெல்லி- என்சிர் பகுதி உள்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தென்கிழக்கு பகுதியான கிஸ்த்வாரில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்க ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 60 கிமீ (37.28 மைல்) ஆழத்தில் இருந்தது எனவும், இதன் மையப்பகுதி பஞ்சாபில் உள்ள பதன்கோட்டில் இருந்து வடக்கே 99 கிமீ தொலைவில் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவொரு உயிரிழப்புகள், பொருள் சேதமும் ஏற்படவில்லை.

முன்னதாக, மியான்மர் பகுதியில் 3.7 ரிக்டர் அளவுகோலில் இன்று அ்திகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆளத்தில் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 31ஆம் தேதி இதேபோல் மியான்மர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இன்று வடஇந்தியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் இமச்சால பிரதேச மாநிலம் மண்டி, குல்லு, பிலாஸ்பூர் பகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோட மாவட்டத்தில் உள்ள கந்தோ பலேசா கிராம பகுதிக்கு அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில விநாடிகள் வரை நீடித்த நிலநடுக்கமானது 5.3 ரிக்டர் அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்