cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

திருமணம் செய்துகொள்ள கேட்ட காதலி... கொலை செய்து சாக்கடையில் வீசிய கோவில் பூசாரி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண்ணை கொலை செய்து பாதாள சாக்கடையில் வீசிய கோயில் பூசாரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சம்ஷாபாத் பகுதியில் கோயில் ஒன்றில் பூசாரி ஆக வேலை செய்து வந்தவர் சாய் கிருஷ்ணா. சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், வேலையை விட்டுவிட்டு பூசாரி ஆகவும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். சாய் கிருஷ்ணாவிற்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமணமாகாத அப்சரா என்ற பெண்ணுடன், பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்சரா, பூசாரி சாய் கிருஷ்ணாவை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஏற்கனவே மனைவி இருப்பதால் அப்சராவை விட்டு விலக, சாய் கிருஷ்ணா முடிவெடுத்துள்ளார். ஆனால் அப்சராவின் திருமணம் அழுத்தத்தால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 3ஆம் தேதி தனிமையில் பேச வேண்டும் எனக்கூறி அப்சராவை தன்னுடைய காரில் சோரையூர் பகுதிக்கு அழைத்து சென்றார்.

ஆள்நடமாட்டம் இல்லாத நற்குடா என்ற பகுதியில் காரில் இருந்து கீழிறக்கி, அப்சராவின் தலையை அங்குள்ள சுவற்றில் மோதி நிலைக் குலைய வைத்துள்ளார். பின் கீழே கிடந்த கல்லை தூக்கி அப்சராவின் தலையில் போட்டு துடிதுடிக்க அவரை கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த ரகசிய காதலியின் உடலை, காரில் ஏற்றி சரோநகர் பகுதிக்கு எடுத்துச் சென்றார் சாய் கிருஷ்ணா. கடையிலிருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி காரில் வைத்தே அப்சராவில் உடலை காற்று புகாதபடி அடைத்துள்ளார்.

பின்னர், இரவில் அதே பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் மூடியை திறந்து காதலியின் உடலை அதில் வீசி விட்டு சென்றார். அங்கிருந்து ராஜீவ் காந்தி சர்வதேச காவல் நிலையத்திற்கு சென்ற சாய் கிருஷ்ணா, அப்சராவை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

சம்பந்தமில்லாத நபர் ஒருவர் அப்சராவை காணவில்லை என்று புகார் அளித்தது போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்துள்ளது.

துருவி துருவி விசாரணை நடத்தியதில் தான் அப்சராவை கொலை செய்து உடலை பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றதை சாய் கிருஷ்ணா ஒப்புக்கொண்டார். சாய் கிருஷ்ணாவை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்து, அப்சராவின் உடலை தேடி வருகின்றனர். கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணுடன் கோயில் பூசாரி ரகசிய உறவில் இருந்ததுடன் அவரை கொலை செய்து உடலை சாக்கடையில் வீசிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்