// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சர்ச்சையை கிளப்பிய இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டடத்தின் சுவரோவியம்

இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டடத்தில் 'பிரிக்கப்படாத இந்தியாவை' காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் எதிர்புக்களை தூண்டி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் புதிய பாராளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டடத்தில் 'பிரிக்கப்படாத இந்தியாவை' காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சுவரோவியத்தில் பிரிக்கப்படாத இந்தியாவுக்குள் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து பங்காளதேஸ், பூட்டான், மாலைத்தீவுகள், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் என்பன இந்தியாவின் ஒரு பகுதியாக விரிந்துள்ளன.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இது தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதேவேளை, இந்த ஓவியம் 'மக்கள் சார்ந்த' ஆட்சியின் செழிப்பான காலத்தை பிரதிபலிக்கிறது என்றும், 'அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை' என்றும் இந்தியா சார்பில் இதற்கு காரணம் கூறப்பட்டிருந்த போதும் சர்ச்சைகள் தொடர்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்