day, 00 month 0000

ஹெய்டியில் பரிதாபம்...! நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு

ஹெய்டி நாட்டில் திடீர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 11 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில்  37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

13,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். பலருக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அவசர தேவையாக உள்ளது.

இந்நிலையில் தேசிய அவசரகால இயக்க மைய அதிகாரிகளை உடனடியான பாதிக்கப்பட்டவர்களுக்கு  நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பிரதமர் ஏரியல் ஹென்றி உத்தரவிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்