day, 00 month 0000

மண்சட்டி பயன்படுத்துவது தீங்கானது; கனடாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மண்சட்டிகளை பயன்படுத்துவது தீங்கானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த எச்சரிக்கையானது கனடாவிலே விடுக்கப்பட்டுள்ளது. அன்று தொட்டு இன்று வரை மட்பாண்டங்களை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என்றே கூறப்படுகின்றது.

ஆயினும்,  கனடாவில் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் ஒரு வகை மண் சட்டி உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு  விளைவிக்கக் கூடியது என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,  அரோரா குக் வெயார்ஸ் நிறுவனத்தின் மட் பாண்டங்கள் பற்றியே  கனடாவின் சுகாதார திணைக்களம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் சட்டிககளை  அடுப்பில் வைத்தால் அவை  பின்னர் வெப்பமடையும் போது  வெடிக்கக் கூடிய அபாயமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021 மார்ச் மாதம் முதல் 2022 ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்ட மண் சட்டிகளில் இந்த அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், சந்தையிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்த மட்பாண்டங்கள் பயன்படுத்துவதனை தவிர்க்குமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்