day, 00 month 0000

ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு பிரஜாவுரிமையை வழங்கும் சட்டத்தை இரத்துச்செய்வேன்

ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமையை வழங்கும் சட்டத்தை இரத்துச்செய்வேன் என மீண்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார் அமெரிக்காவின் முன்னாள் டொனால்ட் டிரம்ப் .

இந்நிலையில் 125 வருடங்களிற்கு முன்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்த சட்டத்தை தான் ஜனாதிபதியானால் அகற்றுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில்,நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அன்றைய தினமே ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமை கிடைப்பதை தடுப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடுவேன் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

குடியேற்றவாசிகளிற்கு எதிரான கருத்துக்களை மீண்டும் வெளியிட ஆரம்பித்துள்ள ட்டிரம்ப் , சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஊக்குவிக்கின்ற முக்கியமான விடயத்தை நிறுத்துவேன் அதிகளவு குடியேற்றவாசிகள் அமெரிக்காவிற்குள் வருவதை தடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிறப்புரிமை குடியுரிமை என்பது அமெரிக்க அரசமைப்பில்இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவில் பிறந்தவர்கள் அல்லது குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் அதன் அதிகார வரம்பிற்குள் உட்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவின் குடிமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்