// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இந்து ஆலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்பவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை

அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்பவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம்  அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் அவுஸ்திரேலிய பிரதமரை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலியாவில் இந்துஆலயங்கள் மீதானதாக்குதல்கள் பிரிவினைவாத அமைப்புகளின்  செயற்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் மீண்டும் ஆராய்ந்தனர் என மோடி தெரிவித்துள்ளார்.தங்களின் நடவடிக்கைகள் சிந்தனைகள் மூலம் இந்தியா அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான நல்லுறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சக்தியையும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

நான் ஏற்கனவே எடுத்தநடவடிக்கைகளிற்காக அவுஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன்,எதிர்காலத்தில் அவ்வாறான சக்திகளிற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பேன் என அவுஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்தார் என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்

கடந்த ஜனவரியில் மெல்பேர்னில் உள்ள ஸ்வாமிநாராயணன் ஆலயத்தின் மதில்களில் இந்துஸ்தான் மெர்டாபாத் என எழுதப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

மெல்பேர்னில் வேறு இரண்டு ஆலயங்கள் இலக்குவைக்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியிருந்தன.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் தங்கள் சமூகத்தினர் மத்தியில் சர்வஜனவாக்கெடுப்பை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளிள் செயற்பாடுகள்அதிகரித்துள்ளன என இந்திய தூதரகம் ஜனவரியில் கரிசனை வெளியிட்டிருந்தது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்