// print_r($new['title']); ?>
day, 00 month 0000

2026-ல் நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் செய்தியாளரின் பல்வேறு கேள்விக்கு ஒளிவு மறைவு இன்றி பதில் அளித்தார்.
மேலும், தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பை எவ்வாறு நம்புவது என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, கடந்த காலங்களில் பதவியை அனுபவித்துவிட்டு கடைசி 6 மாதத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள்.

அவர்கள் (தி.மு.க.) முதலில் காங்கிரஸை ஒழிக்க வே்ணடும் என்றார்கள். தற்போது பா.ஜ.க என்கிறார்கள். இவர்கள் 50,60 ஆண்டுகளாக இந்த மண்ணை ஆண்டுக்கொண்டு, ஊழல், பணம், லஞ்சம் என திளைக்கின்றனர்.
ஒருபுறம் இணைகிறார்கள், மறுபுறும் விலகுகிறார்கள். ஆனால் நாம் தமிழர் அப்படியில்லை.
நாங்கள் தொடர்ந்து தனித்துப் போட்டியிடுவோம்” என்றார். தொடர்ந்து அ.தி.மு.க தொடர்பான கேள்விக்கு, ஒரு பெண் இருந்தால் மாப்பிள்ளை வீடு வரத்தான் செய்யும்.

அதுபோல்தான் அவர்கள் பெண் கேட்பார்கள். ஆனால் கொடுப்பதும் மறுப்பதும் எங்கள் விருப்பம். நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கக் கூடாது என்ற காரணத்திற்காகதான் நாங்கள் முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திக்கிறோம்” என்றார்.

இதையடுத்து நடிகர் விஜய்  தொடர்பான கேள்விக்கு, “கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோதும் வரவேற்றோம். அதுபோல் நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கி, அரசியலுக்குள் நுழையும் போதும் வரவேற்போம்.
அவர் 2026ல் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்றார். 2024-ல் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. சீமானின் கூற்றுப்படி நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அரசியலுககுள் நுழைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்