cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

20நாட்கள் விடுமுறையுடன் 1.3கோடி சம்பளம்...!எமது நாட்டிற்கு வாருங்கள் - வைரலாகும் விளம்பரம்

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறையுடன் மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளம் வழங்குவதாக கூறும் விளம்பரமொன்று  தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனமே இந்த விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்தும் நோக்கில் மிகவும் கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

வைரல் ஆகி வரும் விளம்ர பதிவில், "டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? ஆஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை செய்து, 20 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்." "ஆண்டு வருமானம் 2 லட்சத்து 40 ஆயிரம் டொலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடி. இத்துடன் தங்கும் இடம் வழங்கப்படும். சைன்-இன் போனஸ் தொகையாக ரூ. 2.7 லட்சம் வழங்கப்படும்," என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

அத்துடன், இந்த விளம்பரம் பிரிடிஷ் மருத்துவ இதழின் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதுடன், எழுத்தாளர் மற்றும் முன்னாள் மருத்துவ நிபுணரான  ஆடம் கேயும்  தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்