cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

ஜோ பைடனின் அவுஸ்திரேலிய பயணம் ரத்து; குவாட் உச்சிமாநாடும் ரத்தாகியது

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  அவுஸ்திரேலியா, பப்புவா நியூகினியா நாடுகளுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் உச்சி மாநாட்டை அவுஸ்திரேலியா இரத்துச் செய்துள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன், இன்று புதன்கிழமை ஜப்பானுக்கு பயணம் செய்யவுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 முதல் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில்  ஜோ பைடன் பங்குபற்றவுள்ளார்  என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜி7 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து மே 24 ஆம்  திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில்  3 வேது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் ஜோ பைடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை முன்னர்  அறிவித்திருந்தது. இந்த  உச்சி மாநாட்டின்போது இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பார் என கூறப்பட்டிருந்தது. 

பப்புவா நியூகினிக்கும் ஜனாதிபதி பைடன் விஜயம் செய்யவிருந்தார். 

எனினும், அவுஸ்திரேலிய, பப்புவா நியூகினிக்கான பயணங்கiளை ஜனாதிபதி பைடன் ரத்துச்  செய்துள்ளார். 

எனினும்; ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜோ பைடன் அமெரிக்கா திரும்பவுள்ளர்ர.  

அமெரிக்காவில் நிலவி வரும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பான ஆலோனகளுக்காக ஜோ பைடன் தனது அஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. யுடளழ சுநயன - ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து - வெள்ளை மாளிகை அறிவிப்பு இந்நிலையில் ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிட்னியில் நடக்க உள்ள குவாட் சந்திப்பை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. 

அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் இந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சந்திப்பார்கள் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்