cw2
பக்முத் நகரில் நடைபெற்ற போரில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்வரிசையில் போரிட்டு வந்த இராணுவ மற்றும் அரசியல் பணிக்கான துணை இராணுவ கார்ப்ஸ் தளபதி கர்னல் யெவ்ஜெனி ப்ரோவ்கோ கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4 வது மோட்டார் பொருத்தப்பட்ட துப்பாக்கி படையின் தளபதி கர்னல் வியாசெஸ்லாவ் மகரோவ் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோது கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.