cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

பிரபல கே-பாப் இசைக்குழுவில் இருந்து ராப் பாடகர் லூகாஸ் விலகல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிரபல இசைக்குழுவான WayV-ல் இருந்து பாடகர் லூகாஸ் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NCT எனும் தென்கொரிய இசைக்குழுவின், சீன பிரிவான ’WayV’ இசைக்குழுவில் ராப் பாடகராக தன்னை இணைத்துக் கொண்டவர் லூகாஸ் வாங். 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பாடல்களை வெளியிட்டு வரும் WayV இசைக்குழு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதில் உள்ள உறுப்பினர்களையும் ரசிகர்கள் கொண்டாடி வெருகின்றனர்.

இந்நிலையில் தனியாக பல பாடல்களை வெளியிட விரும்பிய லூகாஸ், NCT மற்றும் WayV ஆகிய குழுக்களில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து NCT குழுவின் தயாரிப்பு நிறுவனமான எஸ்எம் எண்டெர்டெயின்மெண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” லூகாஸ் தனது தனித்த படைப்புகளையும் திறமைகளையும் வெளிப்படுத்த விரும்பியதை கருத்தில் கொண்டு, அவர் NCT மற்றும் WayV குழுவில் இருந்து விடுவிக்கப்படுகிறார். தொடர்ந்து ரசிகர்களாகிய நீங்கள் அவருக்கு அன்பையும் ஆதரவையும் தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்