cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

காதல் முதல் காமம் வரை; ஆராச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

காதல் முதல் காமம் வரையான செயற்பாடுகளுக்கும் மனித ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச ஆராச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வரும் காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை துணையாக மாற்றமடையும் அளவிற்கு இந்த ரோபோக்களின் ஆதிக்கமானது காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உற்பத்தி தொழிற்சாலைகளில் மனிதர்களிற்கு உதவியாகவும் , வளர்ந்த நாடுகளில் வீட்டு வேலைகளை செய்வதுடன்  பணிசுமைகளை குறைப்பதிலும் ரோபோக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்வாறுள்ள ரோபோக்கள் சமீபகாலங்களாக மனித உறவுகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.

எந்த துணையுமின்றி தனிமையில் வாடுவோர் அலெஸ்ஷா போன்ற A.E கம்பானியனை அதிகம் நாடி செல்வது போல  சோபியா போன்ற ஹியூமனைட்  ரோபோக்களும் மனிதர்களை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன.

இவற்றினை எல்லாம் அவதானித்த முன்னை தொழிநுட்ப நிறுவனர் உயிருள்ள மனிதரை போல மனிதர்களுடன் ஒட்டி உறவாடும் வகையிலான மனித ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மனிதர்களை போன்று நடப்பது சொல்வதை மட்டும் செய்வது போன்ற ரோபோக்களை போலன்று மனிதர்களின் காதல் முதல் காமம் வரையான உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் வகையிலான ரோபோக்களை உருவாக்கு முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இவ்வாறான ரோபோக்களின்  சமூக மற்றும் குடும்ப தாக்கம் பற்றியும் இவற்றினை செய்வதற்கான நெறிமுறைகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

கணவன் மனைவியிடையே காணப்படும் கட்டுப்படுத்தல், புரிதலின்மை மற்றும் அதிகாரம் செலுத்துதல்போன்ற பண்புகள் இவற்றிடம் காணப்படாது எனவும் மனிதர்களை முழுமையாக நேசிக்கும் வாழ்கை துணையாக அமைத்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் இது குறித்து எதிர்த்து வாதிடும் சிலர் நன்மைகள் இருப்பினும் இதனால் பாதக விளைவுகள் ஏற்படும் எனவும் ஆகவே இதன் பாதக விளைவுகளையும்  நன்கு ஆராய வேண்டும் என்றும் எச்சரிகை விடுத்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்