cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

டுவிட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம் - எலான் மஸ்கின் புதிய திட்டம்

டுவிட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

எலான் மஸ்க், கடந்த ஒக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து எலான் மஸ்க் மேலும் தெரிவிக்கையில், அந்த வகையில், டுவிட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் காணொளிகள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும்.

அதிக உரையுடன் நீண்ட காணொளிகள், முக்கியமானவைகளை பதிவிடலாம் மற்றும் அவற்றை உங்களை பின்தொடருபவர்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.

மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு, டுவிட்டர் பணம் எதையும் வைத்திருக்காது. உங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் பெறும் பணத்தை இனிமேல் நீங்கள் பெறுவீர்கள்.

இதன் மூலம் iOS மற்றும் Android இல் 70 சதவீதமும் இணையத்தில் 92 சதவீதமும் பணம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் உங்கள் வேலையை மேம்படுத்தவும் நாங்கள் உதவுவோம். படைப்பாளர்களின் பண வாய்ப்பை அதிகரிப்பதே எங்கள் குறிக்கோள் என அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்