cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

நிலவில் கட்டிடம் கட்ட தயாராகும் சீனா-கலக்கத்தில் நாசா

சீனா நிலவில் கட்டிடங்களை அமைப்பதற்கான  கட்டுமான பணிகளை ஆரம்பிக்க  தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் இந்த பணியில் 100 ற்கும்  மேற்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் விண்வெளி ஒப்பந்ததாரர்கள் என பலர் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில்  சீனாவின் உகானில் விஞ்ஞானிகள் மாநாடு ஹவாசோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

மாநாட்டில் நிலவில் அதிக நாட்கள் தங்கி வாழ்வதன் சாத்தியக் கூறுகளை மட்டும் ஆராயாது , நிலவில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தில் சீனா செற்பட்டு வருவதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சீனா வெற்றி பெருமாக இருப்பின்  நிலவில் தளம் அமைக்கும் முதல் நாடு என்ற பெருமையை சீனா பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த விடயம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்