cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

7 ஆண்டுகளில் சாகா வரம் - மாறப்போகும் மனித குலத்தின் தலையெழுத்து

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவார்கள் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியான 75 வயது ரே குர்ஸ்வேல் இதுவரை 147 முன் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது.

2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கணினிகள் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறியிருந்தார். அதேபோல் இணைய வளர்ச்சி, வயர்லெஸ் தொழில்நுட்ப மாற்றம் அதிகளவில் இருக்கும் என இவர் கூறிய முன் கணிப்புகளும் மிகச்சரியாக இருந்தது.

சமீபத்தில் வெளியான நேர்காணலில் ரே குர்ஸ்வேல் தெரிவிக்கையில், கடந்த 2005-ம் ஆண்டில் வெளிவந்த `தி சிங்குலாரிட்டி இஸ் நியர்’ என்ற புத்தகத்தில் 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிரந்தர வாழ்க்கையை அனுபவிக்க தொழில்நுட்பம் அனுமதிக்கும் என கூறியிருந்தேன்.

தற்போது மரபியல், ரோபோடிக்ஸ், மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

விரைவில் நரம்புகள் வழியாக செலுத்தப்படும் ‘நானோபோட்ஸ்’ எனப்படும் மிக நுண்ணிய ரோபோக்கள் வரப்போகின்றன.

இவை 50 முதல் 100 நானோ மீற்றர் அகலம்தான் இருக்கும். தற்போது டிஎன்ஏ ஆய்வு, செல் இமேஜிங் பொருட்கள் போன்றவற்றில் நானோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முதுமை, உடல்நல பாதிப்பில் இருந்து மனிதர்களை காக்கவும், உடலில் உள்ள செல்களை பழுது பார்க்கவும் நானோ ரோபோ உதவும்.

இதனால், 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிரந்தர வாழ்க்கையை அனுபவிக்க இந்த தொழில்நுட்பம் அனுமதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்