day, 00 month 0000

உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர் தயார்: அடுத்த வாரம் கடமைக்கு!

மனிதனுக்காக வாதாட போகும் உலகின் முதல் ரோபோ லாயர். இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை. மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து தற்போது வழக்கறிஞராக அவதாரம் எடுத்துள்ளது இந்த ரோபோ. இந்த ரோபோ முதல் முறையாக நீதிமன்றத்தில் ஒருவருக்காக வாதாட உள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் விளைவாக இயற்கைக்கு சவால் விடும் வகையிலான கண்டுபிடிப்புகள் உலகில் உருவாகி வருகின்றன. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மனிதனுக்கே மாற்று கொண்டு வரும் முனைப்பில் விஞ்ஞானிகள் பல காலமாக இயங்கி வருகின்றனர்.

மனிதன் செய்யும் அத்தனை வேலையையும் செய்யும்படியான அறிவை எந்திரங்களுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கு புகுத்துகின்றனர். வருங்காலத்தில் மனிதர்கள் எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த எந்திரனை வழி நடத்தும் வேலையை தவிர. ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய இந்த ரோபோ வரலாற்றில் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஒருவருக்காக வாதாட உள்ளது.

இந்த நிறுவனத்தை ஜோஷ்வா ப்ரோடர் என்பவர் 2015 ஆம் ஆண்டு நிறுவினார். தற்போது இந்த நிறுவனம் உலகின் முதல் ரோபோ வழக்கறிஞரை அறிமுகபடுத்தியுள்ளது. தாமதமாக அபராதம் செலுத்துபவர்களுக்கு உதவவே இந்த ரோபோ வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது எனவும் இதற்கு பயிற்சி அளிக்க நீண்ட காலம் ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்