cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

வட்ஸ்அப்பில் வந்த போட்டோ, வீடியோ டெலிட் ஆயிடுச்சா! இப்படி மீட்டெடுக்கலாம்

சாட்டிங் செயலியான வாட்ஸ்அப்பில் நாள்தோறும் வீடியோ, புகைப்படம், ஆடியோ என பலதரப்பட்ட மெசேஜ்கள் ஷேர் செய்யப்படுகின்றன. இதனால், ஸ்டோரேஜ் பிரச்சனையும் ஏற்படுகிறது. அப்படி ஸ்டோரேஜ் பிரச்சனை ஏற்படும்போது தவிர்க்க முடியாத காரணத்தால் அடிக்கடி WhatsApp பைல்களை நீக்க வேண்டியதுள்ளது. இதில் சில முக்கியமான பைல்களையும் நாம் இழக்க நேரிட்டுவிடும். அப்படியான தருணத்தில் இழந்த பைல்களை நீங்கள் சுலபமாக மீட்டெடுக்கலாம்.

உங்களுக்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம். ஆனால், உண்மை, நீங்கள் வாட்ஸ்அப்பில் இழந்த பைல்களை மீட்டெடுக்கலாம். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து மீடியா பைல்களை நீக்கி இருந்தாலும், அவை உங்கள் போனின் போட்டோ கேலரியில் அப்படியே இருக்கும். உங்கள் கூகுள் போட்டோஸ் அல்லது போட்டோஸ் iOS கேலரியில் அப்படியே இருக்க வாட்ஸ்அப் செட்டிங்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

மீடியா போல்டரில் இருந்து வாட்ஸ்அப் மீடியாவை மீட்டெடுக்க ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே விருப்பம் உள்ளது. பைல் எக்ஸ்ப்ளோரர் ஆப்ஸை இயக்கவும். ரூட் WhatsApp போல்டர் பகுதிக்குச் செல்லவும். இப்போது மீடியா போல்டர் சென்று வாட்ஸ்அப் படங்கள் போல்டரை தேர்ந்தெடுக்கவும். பெறப்பட்ட படங்கள் அனைத்தும் இங்குக் காண்பிக்கப்படும். சென்ட் போல்டர் சென்று நீக்கப்பட்ட புகைப்படம் அல்லது பிற படங்களைக் கண்டறியலாம். 

இதுமட்டுமல்லாமல், iOS யூசர்களுக்காக iCloud மற்றும் Android பயனர்களுக்கான Google Drive ஆகியவற்றிற்கு WhatsApp பேக் அப் அம்சத்தை வழங்குகிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மெசேஜ் முதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வரை அனைத்தும் இதில் ஸ்டோர் செய்யலாம். இதன் மூலம் இழந்த பைல்களை நீங்கள் மீட்டெடுக்கலாம். இதிலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், வாட்ஸ்அப்பை நீங்கள் அன் இன்ஸ்டால் செய்யுங்கள். அதற்கான செயல்முறைகளின்போது, வாட்ஸ்அப் பேக்கப் கேட்க்கப்படும். அதில் பேக்கப் ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்தால், இழந்த பைல்களை நீங்கள் மீட்கலாம்.  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்