day, 00 month 0000

புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் மெப்ஸ்

உலகளவில் பெருமளவிளான மக்களால் பயன்படுத்தப்படும் இணையவழி வரிப்படமாக கூகுள் மெப்ஸ் இருந்து வருகிறது.

இந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனமானது பயனர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் முதலாவதாக,  பொதுவாக மெப் செயலியை பயன்படுத்தும் பயனர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது.

இதனைகருத்திற்கொண்டு தற்போது வரைப்படத்தை சேமித்து வைத்து இணையவசதி இல்லாத சந்தர்ப்பத்தில் இதை மீள் உபயோகம் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் தொலைபேசி சேமிப்பில் பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் வரைப்படத்தை அகற்றிகொள்ளவும் முடியும்.

அடுத்ததாக வீதியில் வாகன நெரிசலை கருத்திற்கொண்டு வேறு பாதையை பரிந்துரை செய்வதோடு அந்தந்த வாகனங்களுக்கு ஏற்றவிதமான பாதையையும் பரிந்துரை செய்யும்.

இதேவேளை ஒரு குறித்த பிரதேசத்தில் வாகன நெரிசல் தொடர்பாக நிகழ்நிலை தகவல்களை(Real time updates) வழங்கும் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்